மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளையினை கொக்கட்டிச்சோலை பொலிசார் அவரின் இல்லத்திற்கு கொண்டு சென்று கையளித்தனர்.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை கட்டளை பத்திரத்தில் முன்னாள் அமைச்சர் பதவி வகிக்காதவருக்கு அமைச்சர் என நீதிமன்ற தடை கட்டளை பத்திரத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது