ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று 12-05-2021ம் திகதி இரவு இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 2கிராம் 700 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 45 வயதுடைய பெண்ணை தேக்கவத்தை பகுதியிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா காவற்துறையினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.