இந்த இக்கட்டான கட்டத்தில் நாடு கட்டாயம் பூட்டப்பட்ட நிலைக்கு செல்ல வேண்டும் என இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கிராம சேவகர் மட்டத்தில் தனிமைப்படுத்தப்படுவது போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.
“குழாய் திறந்திருக்கும் போது, தண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக குழாயை மூட வேண்டும். அவ்வாறுதான் தற்போது பரவலை தடுக்க மாவட்ட ரீதியிலாவது பூட்டுதல் இருக்க வேண்டும் என்றும் மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வதை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும்” அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டிற்குள் சமூக மட்டத்தில் வைரஸ் பரவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமூக பரவல் உருவாகியுள்ளமை தெளிவானது என்றார்.