இலங்கையில் இன்று (10) மேலும் 1,581 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து புதிய தொற்றுக்களும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 127,487 ஆக உயர்ந்துள்ளது தற்போது 21,075 பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்