மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைகளின், வடமேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் மேற்கு சரிவு மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் சில நேரங்களில் காற்றின் வேகம் 40 கி.மீ வரை அதிகரிக்கும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.