ஆடைத்தொழிச்சாலையினால் போரதீவுப்பற்றில் அபாயம்


மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிச்சாலையில் கடமையாற்றுபவர்கள் கொரோனா நோயினால் அதிகமானவர்கள் இனம் கானப்பட்டனர்
போரதீவுப்பற்றில் இன்று 31-05-2021ம் திகதி 97 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட
அன்ரிஜன் பரிசோதனையில் 21 தொற்றாளர்கள் அடையாளம் கானப்பட்டனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையில் சுகாதார பிரிவினரால் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் இன்று போரதீவுப்பற்று சுகாதார பிரிவுக்குட்பட்ட தும்பங்கேனி பெரியபோரதீவு பட்டாபுரம் .பழுகாமம் இளைஞர் விவசாயத்திட்டம் களுமுந்தன்வெளி காந்திபுரம் ஆகிய கிராமங்களில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் சுமார் 97 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 21பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

போரதீவுப்பற்றில் அதிகமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான காரனம் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் கொரோனா நோய் பரவும் ஆரம்பத்தில் ஆடைத்தொழிச்சாலையினை மூடி இருந்தால் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்காது என கிராமவாசிகள் கூறுகின்றனர்

போரதீவுப்பற்று சுகாதார பிரிவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருவதாகவும் பயணத்தடையினை முழுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
புதியது பழையவை