கோவிட் தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக நாடு முழுவதும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று 14-05-2021ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதாக அங்கிருக்கும எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுள்ளதுடன், பிரதான சந்தை உட்பட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
மாவட்டத்தில் பல பகுதிகளில் முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.