அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் மேற்கொண்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இன்று 01-06-2021ம் திகதி (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை முடிவிலேயே 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பொலிஸாரை, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது .
திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் சேர்த்து திருக்கோவில் சுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் தலைமையில் தற்போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது .
மேலும் தற்காலிகமாக பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.