நாட்டில் கொரோனா அனத்தத்தினால் பயணத்தடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று 02-06-2021ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காகவும் பயணத்தடை கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்காகவும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதற்காக சுமார் 30 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.