மன்னாரில் உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம்


நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்றைய காலை உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறை முகத்துக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளமையினால் நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளி வந்துள்ளது.

எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முன்டியடித்தக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தற்போது அதிக அளவு உப்பு கையிறுப்பில் உள்ளதோடு, பெரும் போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம் பெற்று வருவதாக மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை