செங்கலடி பிரதேச செயலாளர் விசாரணைக்காக கொழும்பிற்கு இடமாற்றம்!


மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் விசாரணைகளுக்காக கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் அவர்கள் பாலியல் சர்ச்சை, பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து அவரை விசாரணைக்காக கொழும்பிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அமைச்சு அறிவித்துள்ளது.

விசாரணைக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் அவர்களின் இடத்திற்கு தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாவு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை