தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டனர்


திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவில் கொவிட் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளோர் என அரச அதிகாரிகளினால் பட்டியலிடப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இவ்வத்தியாவசிய உலர் உணவுப்பொதிகள், குச்சவெளிப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரிடம் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் திருகோணமலை மாவட்டத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான திரு.ச.குகதாசன் அவர்களினால் இன்று (04.06.2021) வழங்கி வைக்கப்பட்டது.

இப்பொதிகள் உரிய அதிகாரிகளின் மூலமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தற்போதைய முழு அடைப்பு காராணமாக நாளாந்த வேலை பாதிக்கப்பட மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கும் இவ்வுணவுப்பொதி வழங்கப்பட்டது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நிரந்தர வருமானமற்ற குடும்பங்களுக்கு அரசு வழங்குவதாகக் கூறும் உதவிகள் முறையாக் கிடைக்கவில்லை என்பது தெரியவருகின்றது.
புதியது பழையவை