இன்று 23-06-2921ஆம் திகதி காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம்
நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம்
பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள்,
காத்தான்குடி பிரிவு 4,
காத்தான்குடி பிரிவு 5 தெற்கு,
காத்தான்குடி பிரிவு 6 மேற்கு,
புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு,
தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
கர்பலா வீதி,
ஏ.எல்.எஸ். மாவத்தை,
நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.