நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைப்பு


மட்டக்களப்பு மாவட்டம்  நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக இன்று 09-06-2021ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது..

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் மற்றும்
நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்டோர் அடங்கிய வைத்தியர்களால் குறித்த சிகிச்சைப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இங்கு நூறு கட்டில்கள் அமைக்கப்பட்டு நூறுநோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாக இந்த சிகிச்சைப்பிரிவு திறந்துவைக்கப்பட்டது.
என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


புதியது பழையவை