மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பேராளி ஒருவர் கைது!




விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளி ஜனநாயகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போரளி ஒருவரை இன்று 01-06-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலையடுத்து களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் சம்பவதினமான இன்று முன்னாள் போராளியும், முன்னாள் போராளிகள் ஜனநாயகட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் பெரியபோரதீவு மட்பாண்ட வீதி பிரதேசத்திலுள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர் கைது செய்யப்பட்டவரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
புதியது பழையவை