மட்டக்களப்பில்-ஆற்றுக்குள் பாய்ந்த இராணு வாகனம் -இரு இராணுவத்தினர் பலி


மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இராணுவ வாகனம் ஆற்றினுல் பாய்ந்ததில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று(25) மாலை ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செங்கலடி பதுளை பிரதான வீதியில் கறுத்தப்பாலத்திற்கு அருகாமையிலுள்ள பாலத்தில் மேல்இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்து மூழ்கியுள்ளது.

இந்நிலையில் அதில் பயணித்தவர்களை விரைந்து சென்ற இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இதில் பயணித்த நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் பலியாகியதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் வைத்தியசாவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதியது பழையவை