கரையொதுங்கி பாரிய சுறா மீன்


திருகோணமலை - குச்சவெளி கடற்கரையில் நேற்று14-06-2021ஆம் திகதி மாலை பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கி இருந்தது.
உயிருடன் இருந்த குறித்த சுறா மீனை மீண்டும் கடலில் பாதுகாப்பாக விடுவித்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

இது 300 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட சுறா மீனாக இருப்பதாகவும் நான்கு அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
புதியது பழையவை