கொரோனா சிகிச்சை பிரிவு வாகரை ஆதார வைத்தியசாலையில் திறப்பு


கொவிட் தொற்றினை கருத்தில் கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கட்டில் தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை பிரிவு நேற்று  வாகரை ஆதார வைத்தியசாலையில்  வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

இடை நிலை வைத்திய நிலையம் என அழைக்கப்படும் தரம் -111 இற்கான திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தௌபிக், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன்,மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார வைத்தியர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர். 


மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆவது கொரோனா சிகிச்சை நிலையமாக இவ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை,காத்தான்குடி,கல்லாறு மற்றும் கரடியனாறு ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


புதியது பழையவை