தனது இருமாத சம்பளத்தையும் அமையஊழியர்க்கு நிவாரணமாக வழங்கினார் தவிசாளர் ஜெயசிறில்!



அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசசபையில் பணியாற்றும் 23 அமையஊழியர்களுக்காக தனது இருமாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கினார் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில். சமுகசேவையாளர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடாக இதனை அவர் முன்னெடுத்திருந்தார். ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

சமகால கொரோனாத் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த அமைய சுகாதார ஊழியர்கள் 23பேருக்கும் உலருணவு நிவாரணம் நேற்று 22-06-2021ஆம் திகதி வழங்கப்பட்டது.
தவிசாளர் கி.ஜெயசிறில் தாமாக முன்வந்து தனது இருமாத கொடுப்பனவான 50ஆயிரம் ருபாவை இதற்காக வழங்கி உலருணவுப்பொதிகளையும் வழங்கிவைத்தார்.

சபை முன்றலில் சுகாதாரமுறைப்படி நேற்று நடைபெற்ற இவ்வைபவத்தில் சபையின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு பொதிகளை வழங்கிவைத்தார்கள்.
தவிசாளரின் ஏற்பாட்டில் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் மத்தியமுகாம் வரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டுவந்தமை தெரிந்ததே.

இதேவேளை அண்மையில் முதலாவதாக உயிரிழந்த காரைதீவு பிரதேசசபை ஊழியர் வி.சுரேந்திரனின் குடும்பத்திற்கும் நிதியுதவி வழங்க தவிசாளர் உறுப்பினர்கள் சபை ஊழியர்களும் முன்வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை