05வது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் அமைப்புக்கள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது இரத்ததான முகாம் மண்முனை வடக்கு பிரதேசத்தில் கறித்தாஸ் எகெட் சர்வமத இளைஞர் கழகத்தின் அனுசரணை ஒருங்கிணைப்பில் 5வது இளைஞர் பாராளுமன்றம், ஹெல்ப் எவர் அமைப்பு, மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இயற்கையின் மொழி ஆகிய அமைப்புக்களின் ஒருமித்த ஏற்பாட்டில் சாள்ஸ் மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியினால் இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வுக்கு கறித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜெசுதாசன் அடிகள், பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் திருமதி. நிஷாந்தினி அருள்மொழி, கறித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இணைப்பாளர் கிறிஷ்டி, பிரதேச இளைஞர் உத்தியோகஸ்தர் பிரவின், 05 வது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித், 03 வது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பயஸ்ராஜ் மற்றும் எவர் ஹெல்ப் அமைப்பின் தலைவர் கீர்த்தனன் மற்றும் அங்கத்தவர்களும், இயற்கையின் மொழி அமைப்பின் தலைவர் திருமதி காயத்ரி உதயகுமார் மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது இரத்தக் கொடையாளர்களுக்கு இயற்கையின் மொழி அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இளைஞர் அமைப்புக்கள் சார்பில் முற்று முழுதான நிதி அனுசரணையை வழங்கியமைக்காக கறித்தாஸ் எகெட் இயக்குனர் அருட்தந்தை ஜெசுதாசன் அடிகளாருக்கு நன்றிகளை தெரிவித்ததொடு கடினமான சூழ்நிலைக்கு மத்தியிலும் வருகை தந்து இரத்தத்தை கொடையாக வழங்கிச்சென்ற 125க்கும் மேற்பட்ட இரத்தக்கொடையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.