தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியற்துறை பொறுப்பாளர் லெப் கேணல் கௌசல்யனின் பெயரில் சுவிஸர்லாந்தின் பேண் நகரில் கலையகம் ஒன்றை ஏற்படுத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கலையகத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்ய சுவிஸ் நீதிமன்றம் மறுத்துள்ளதால், இந்த கலையகத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.