மக்களின் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்காகவே பயணக்கட்டுப்பாடு


எரிபொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான, மக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காகவே பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அனைத்துப்பங்களிலும் அரசாங்கமும் நாடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதென்றார்.
இலங்கைக்கு கிடைத்துவந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இல்லாதுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி வரி நிறுத்தம் தொடர்பிலான தீர்மானம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் படுதோல்வியையே எடுத்துக்காட்டுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிரானவர்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள், மனித உரிமை மீறல், அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை அமர்த்தி, சிவில் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துகின்றமை உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போகும் நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை