மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞன்


மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு இரதயபுரத்தில் இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாகவும், இத் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 22 வயதுடைய விதுசன் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை