நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சீரற்ற வானிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும்.
அங்கு சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மழைபெய்யும்போது தற்காலிகமாக கடுமையான காற்று வீசுவதுடன், இடிமின்னல் மற்றும் காற்றின் காரணமாக முன்னெச்சரிக்கையுடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.