ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் சத்தியப்பிரமாணம்


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) நாடாளுமன்றம் காலை 10 மணிக்கு கூடியது.
இதன்போது, முதலாவது கடமையாக, ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதன்பிகாரம், 225 ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர், நான்கு தசாப்த காலமாக நாடாளுமன்றில் அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எதிர்க்கட்சித் தரப்பில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை