ஆறு மாதங்களில் 35 யானைகள் பலி


பொலன்னறுவை வனஜீவராசிகள் வலயப் பகுதியில், ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில் 35 யானைகள் உயிரிழந்துள்ளன என என்று வனஜீவராசிகள் வலய உதவி அத்தியட்சகர் டபிள்யூ.பீ.கீர்த்தி சந்தரரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 16 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், இவ்வருடம் இந்தத் தொகை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பொலன்னறுவை பகுதியில் இதுவரை காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை அதிகரித்துள்ளதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு, மின்சாரத் தாக்குதல், கட்டுவெடி வெடித்தமை, ரயில்களில் மோதுண்டமை போன்ற காரணங்களாலேயே யானைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளன.

இயற்கை மரணங்களைவிட அனர்த்தங்களால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கையே அதிகம் என்று வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை