இலங்கைக்கு அருகேவுள்ள தெற்காக கடல் பகுதியில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து 766 கிலோமீற்றர் தூரத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ள கடல்பகுதியிலேயே இவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.