லண்டனிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் நடுவானில் வைத்து எரிபொருள் தீர்ந்ததினால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்களை ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
அவ்வாறான எந்த சம்பவமும் நிகழவில்லை என்று ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன் - ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த 6ஆம் திகதி இலங்கை திரும்பிய UL-504 ரகத்திலான இலங்கை விமான சேவைகள் நிறுவனமாகிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் அவசரமாக இந்தியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.