முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நள்ளிரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்ட நிலையில் தெய்வாதீனமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் வணக்கத்திற்காக முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
வானின் சாரதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஏ 9 வீதியில் பயணித்து பால கட்டுமான பணிக்காக கொங்கிறிற் தூண் ஏற்றி சென்ற கனரக வாகனம் மோதியுள்ளது.