மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மட்டக்களப்பு பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனதெரிவித்துள்ளார்
அத்துடன், குறித்த பஸ் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.