செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - ஜனாதிபதி


எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் வரை நீடிக்கும் எனக் கூறினார்.

இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம்.
தொடர்ந்தும் நாட்டை முடக்கிவைத்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார சவால்கள் ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
புதியது பழையவை