நாட்டில் நேற்று 816 பேர் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் வரத் தாமதிக்கின்றன என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.