கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!


இலங்கையில் நேற்றைய தினம் 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்த மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புதியது பழையவை