சிறுவர் இல்லம் ஒன்றில் சிறுமிகள் உட்பட 29 பேருக்கு கொரோனா

மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயச் சூழலில் செயற்படும் இல்லம் ஒன்றில் சிறுமிகள் உட்பட 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் சிறுநாவற்குளம் பகுதியில் செயற்படும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் 11 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த உணவகம் சிவனருள் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரின் ஆளுகையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை