மட்டு-போரதீவுப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றில் ஒருவர் மரணம்

வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் (76) வதுடைய பெண் ஒருவர் கொரோணா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததுள்ளதாக வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 03-08-2021 ஆம்  திகதி தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு பிரேதம் கொண்டு செல்லப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் அனைவருக்கும் தற்போது பொது சுகாதார பரிசோதகர்களினால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

 வெல்லாவெளி சுகாதார வைத்திய பிரிவில் கொரோனா தொற்றில் இது இரண்டாவது மரணம் என்பது குறிப்பிடதக்கது.
புதியது பழையவை