சுகாதார நடவடிக்கைகளின் பின்னர் நாட்டை திறக்க முடிவு – கெஹலிய

பொருளாதாரம் நிலையானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அதற்கமைவாக முடிந்தவரை சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றினை கையாளும் போது அதிகாரிகள் சமநிலையை பேணவேண்டும் என்றும் இல்லையெனில் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சியடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை