இலங்கையின் சாதனையாளருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தொலைபேசியில் பாராட்டு

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த தினேஸ் பிரியந்த ஹேரத்துக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேபோன்று குறித்த வீரருக்குப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளருக்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்! நீங்கள் மிகச் சிறந்தமுறையில் விளையாடினீர்கள். உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளீர்கள். இன்று அனைவருக்கும் சிறந்த உதாரணமாகியுள்ளார்கள்.

அதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பயிற்றுவிப்பாளரே மிகவும் நன்றி. நீங்கள் மிகச்சிறந்த முறையில் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளீர்கள். உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை