காட்டு யானைகளின் தாக்குதலில் வீடுகள் சேதம்


திருகோணமலை- பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(17)
(செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பன்சலகொடல்ல ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம், வீடுகள் மற்றும் உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வான்எல பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் வருவதாக அங்குள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதியது பழையவை