இந்த அவலம் இந்தியாவில் அல்ல நமது இலங்கையில்தான்.ராகம மற்றும், களுபோவில வைத்தியசாலையில் இன்றைய நிலைமை....
முடியுமான வரை கவனமாக இருப்போம்.
இதை பார்த்த பின்னரும் திருமண வீடு சாமத்திய வீடு பிறந்தநாள் செத்தவீடு கோயில் திருவிழாக்களில் மக்கள் கூடும் இடங்களில் கலந்து கொள்வீர்களா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
நமது நாட்டில் தற்போது மரண எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு வருகிறது அதற்குக் காரணம் மக்களாகிய நீங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல் பட்டதன் விளைவுதான்.
இந்த அவல நிலைமை நாட்டிலுள்ள அநேகமான ஆஸ்பத்திரிகளில் நோயாளர் எண்ணிக்கை நாளாந்தம் நிரம்பி வருகிறது நாளாந்தம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது இதையெல்லாம் பார்த்த பின்னரும் கட்டுப்பாடில்லாமல் அலைந்தால் இந்தப்படத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து கிடக்க வேண்டியதுதான்.
தயவு செய்து ஆடம்பர விழாக்களை தற்போதைக்கு நடத்தாதீர்கள். மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்கள் சிலவேளை நாட்டின் நிலைமை கை மாறி போகலாம் அந்த அளவிற்கு நமது ஜனாதிபதி அவர்கள் அவ்வாறு வருவதற்கு அனுமதிக்க மாட்டார் என்பது உறுதி இருந்தாலும் மக்களாகிய நீங்கள் தான் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.