மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை (03) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள வீதியால் மதுபானசாலைக்கு அருகில் பெண் ஒருவர் அவரது மகளுடன் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7 மணியளவில் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் மோட்டர்சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் ஒரு இலச்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கசங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
