பொலிஸ் பிரதம பரிசோதகரின் கை விரல்கள் துண்டிப்பு

மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதம பரிசோதகர் ஜனகந்தவின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ராஜகிரியவில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, தடுப்புகள் கவிழ்க்கப்பட்டபோது அவர் காயமடைந்தார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பிரதம பரிசோதகர் ஜனகந்த தற்போது கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை