பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பளைப் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த பெயர்ப் பலகையில் மோதியுள்ளது.
குறித்த விபத்து இன்று (04)காலை ஏ9வீதி புதுக்காட்டுச்சந்தியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


