இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிப்பு


இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பெரிய வெங்காயம் சந்தைக்கு கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது.

உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை