சர்வதேச ஊடகம் ஒன்று நேற்று வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களின் முடிவின்படி இரு இலங்கை புகைப்படக் கலைஞர்கள் தங்களது கண்காட்சி மட்டத்திலான புகைப்படங்களுக்காக நடுவர்கள் குழுவால் மிகவும் பாராட்டப்பட்டுள்ளனர்.
புத்திலினி டி சொய்சா மற்றும் ககனா விக்கிரமசிங்க ஆகியோரே இச்சிறப்பு கௌரவத்தைப் பெற்றனர். போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டஐம்பத்தேழாயிரம் வனவிலங்கு புகைப்படங்களில் நடுவர் குழு 1,000 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தாலெக் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய சில ஆண் சிறுத்தைகள் பற்றிய காட்சியை புத்திலினி டி சொய்சா புகைப்படம் எடுத்திருந்தார். கென்யாவின் மசாய் மாரா தேசிய பூங்காவில் அனுபவம் மிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞரான டி சொய்சா இவ்வரிய காட்சியைப் படம்பிடித்திருந்தார்.
அடுத்து 3 கிளிக்குஞ்சுகள் தங்கள் தந்தை உணவோடு திரும்பும் போது மரப்பொந்தில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்க்கும் காட்சியை கொழும்பிலுள்ள ஒரு பல்கணியிலிருந்து ககனா விக்ரமசிங்க எனும் 10 வயதான சிறுவன் புகைப்படம் எடுத்திருந்தார்.