இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், பாடசாலைகளை உடனடியாக ஆரம்பிப்பது அத்தியாவசியமாகும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பூஜித விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்படி, தற்போது முதல் பிள்ளைகளின் மனநிலையை தயார்படுத்துவது பெற்றோரின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன் மாணவர்கள் நீண்ட காலத்திற்கு வீடுகளில் தங்கியிருப்பதன் பெறுபேற்றை, எதிர்வரும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அறிந்து கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுவதன் ஊடாக, மாணவர்களின் திறன்கள் மறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை உடனடியாக ஆரம்பிப்பது அத்தியவசியமாகும் என, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பூஜித்த விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.