விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் இலங்கை அரசுக்கு பிரித்தானியா வழங்கிய தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் இலங்கை அரசுக்கு பிரித்தானியா வழங்கிய தகவல் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,
2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது.
புதியது பழையவை