கோவிட் தொற்றுக் காரணமாக அண்மையில் இறந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ். கொடிகாமத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் அவரது உடலம் எரியூட்டப்பட்டது.
இந்த நிலையில் மட்டு. ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.