பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்துகொள்ளமுடியும்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளப்பட்தன் பின்னர் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.