சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒளிப்பு தினம் நவம்பர் மாதம் 25ம் திகதி உலகலாவிய ரிதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது உலகத்தில் பெண்களின் 40 வீகிதமான பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தடுப்பதற்கான விளிப்புனர்வு செயல்ப்பாடாகவே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காவிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மாவட்ட செயலகத்தில் விளிப்புனர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களையும் வெள்ளை பட்டி அணியும் நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இன் நிகழ்வில் கலந்து கொண்ட காவிய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி.ரதி அஜித்குமார் கருத்துரைக்கையில் பெண்களுக்கு எதிரான வன் முறைகள் வீடுகளிளும் வேலைத்தளங்களிலும் போக்குவரத்தின் போதும் உடல் லியல் ரீதியாகவும் உளவியல் பாலியல் என பல விதமான வன்முறைகளுக்கு பெண்கள் சிறுமியாக இருக்கின்ற காலமுதல் வன்கொடுமைகளை அனுபவிக்கின்றனர் இதனை வெளியில் கூறினால் குடும்பத்தின் கொளரவம் பெற்றோர்களின் நற்பேயருக்கு கலங்கம் ஏற்படும் எனும் என்னத்தில் பெண்கள் தங்களின் மனதுக்குள் பூட்டிக்கொண்டு வாழவேண்டியவர்களாக மாறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உருவாகின்ற இடத்தை அடையாளப்படுத்தி சட்டத்தின் முன் கொண்டு செல்வதனுடாக எமக்கு எதிரான வன் கொடுமைகளை சமூகத்தில் இருந்து தவிர்த்துக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டார்.
பெண்களும் ஆண்களுக்கு சரி சமமாக உலகில் எல்லாத்துறைகளிலும் செயல்பட்டு வருகின்றனர் இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன் முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொன்டுதான் போகின்றது இதனை தடுபதற்கான விளிப்புனர்வு செயல்பாட்டினை வி எபெக்ட் நிறுவனமும் கடந்த 20 வருடங்களாக பெண்கள் தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.