மட்டு-கவிஞர் மேரா' வின் ஆறு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'கவிஞர் மேரா' வின் ஆறு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'கவிஞர் மேரா'வின் ஆறு நூல்கள் வெளியீடு நிகழ்வு 06/11/2021 சனிக்கிழமை முனைக்காடு உக்டா பண்ணையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக பேராசிரியர் மா.செல்வராஜா, பேராசிரியர் செ.யோகராசா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலாநிதி உசாந்தி துரைசிங்கம், கிழக்கு பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர் சு.சந்திரகுமார், விரிவுரையாளர் த.விவேகானந்தராசா, மட்டக்களப்பு தபால் திணைக்கள பிராந்திய கணக்காளர் திருமதி சந்திரகலா ஜெயந்திரா,
ஓய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.த.சோமசுந்தரம், ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன்,
ஆசிரியர் மத்திய நிலைய ஓய்வு நிலை முகாமையாளர் சி.குருபரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


புதியது பழையவை